9.6 C
Cañada
March 13, 2025
விளையாட்டு

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஐந்தாவது போட்டியில் இந்திய அணியானது இன்றைய தினம் (23) நடப்பும் சாம்பியனும், பரம எதிரியுமான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டமானது துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பங்களாதேஷுக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் இந்தியா தனது குழுவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதேநேரம், கராச்சியில் நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தான் பாகிஸ்தான் அரையிறுதியும் வாய்ப்பினை தக்க வைக்க முடியும்.

ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ளன.

அதில் மூன்றில் பாகிஸ்தானும் இரண்டில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன.

இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.

இதனால், இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண வரலாற்றில் இந்தியா அணியானது இரண்டு முறையும் பாகிஸ்தான் அணியானது ஒரு முறையும் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெப் தொடரில் நடிக்கும் இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி

admin

கிரிக்கெட் ஜாம்பவான்கள் மோதும் மாஸ்டர் லீக் போட்டி இன்று – சங்கா VS டெண்டுல்கர்

admin

பெங்களூரு அணியை வீழ்த்திய மும்பை அணி

admin

Leave a Comment