BMW Motorrad India நிறுவனம் தனது புதிய BMW C 400 GT மேக்ஸி-ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய 2025 BMW C 400 GT முற்போக்கான மற்றும் ஆற்றல்மிக்க வடிவமைப்புடன் வருகிறது. மேலும் இந்த பிரீமியம் ஸ்கூட்டர், full-LED headlamp, DRL, Adjustable Windshield, Keyless Ride ஆகிய அம்சங்களுடன் வருகிறது. அத்தோடு 775 மிமீ இருக்கை உயரம் சிறந்த வசதி மற்றும் அணுகலை வழங்குகிறது.
இந்த ஸ்கூட்டர் Blackstorm Metallic மற்றும் Diamond White Metallic (கோல்டன் ரிம்கள் மற்றும் பிரீமியம் லைட்டிங் உடன்) இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். BMW Motorrad ABS Pro, Dynamic Traction Control (DTC), Engine Drag Torque Control (MSR) உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
BMW C 400 GT-யில் 10.25-inch TFT டிஸ்ப்ளே, Connectivity Pro உடன் ஸ்மார்ட்போன் இணைப்பு, USB-C இணைப்பு, சார்ஜிங் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புறம் 4.5 லிட்டர் சேமிப்பு இடம், இருக்கைக்கு அடியில் 37.6 லிட்டர் சேமிப்பு இடம் நகர்ப்புற மற்றும் நீண்ட பயணங்களுக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டுள்ளது.