9.1 C
Cañada
March 14, 2025
சினிமா

ஏப்ரல் 9 ஆம் திகதி தனுஷ் – நயன்தாரா வழக்கின் இறுதி விசாரணை

நயன்தாராவின் வாழ்க்கையை வைத்து உருவாக்கப்பட்ட ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான “நானும் ரவுடி தான்” படத்தின் காட்சி சில நொடிகள் இடம் பெற்றமையால் சர்ச்சை உருவானது.

இக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 22 ஆம் திகதி சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. நடிகர் தனுஷுக்கு எதிராக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நிதிமன்றம் ஏற்க மறுப்பு தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஏப்ரல் 9ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஜெயிலர் இரண்டாம் பாக படப்பிடிப்பு ஆரம்பம்

admin

மகளிர் தினத்தை முன்னிட்டு திடீரென வீடியோ வெளியிட்ட விஜய்

admin

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு பற்றிய விபரம்

admin

Leave a Comment