தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்களின் வருடாந்த கூட்டு இராணுவப்பயிற்சியானது 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தும். அவர்களின் இராணுவப்பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இது தாக்குதலுக்கு முன்னரான இராணுவப் பயிற்சி என கூறி, வட கொரியா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இந்த வருடத்தில் ஐந்தாவது முறையாக வடகொரியா இதுபோன்ற ஏவுகணைகளை கடற்பகுதியில் ஏவியுள்ளது என்று தென் கொரியாவின் கூட்டு இராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தென் கொரியா – அமெரிக்கா இராணுவ கூட்டுப்பயிற்சியை எதிர்த்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சரகத்துக்கு வெளியே போராட்டம் நடந்தப்படுவதுடன், இப் பயிற்சி நாட்டில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் எனக் கூறி அதை நிறுத்த போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.