எலோன் மஸ்கினால் நடத்தப்பட்டு வரும் நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் திங்களன்று 15 சதவிகித சரிவைச் சந்தித்தன. கடந்த வாரம் உட்பட மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தொடர்ச்சியாக ஏழாவது வாரமாக இழப்புகளைச் சந்தித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப் உடன் இணைந்து மஸ்க் பணியாற்றத் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு வாரமும் டெஸ்லா பங்குகள் கடும் சரிவை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த டிசம்பர் 17ம் திகதி டெஸ்லா பங்குகள் ஒன்றின் விலை 479.86 டொலர் என இருந்தது, தற்போது அதன் சந்தை மதிப்பில் 800 பில்லியன் டொலர் அளவுக்கு பேரிழப்பை சந்தித்துள்ளது.
மேலும் ஜனவரி மாதத்தில் ஐரோப்பாவில் டெஸ்லாவின் புதிய கார் விற்பனையில் கிட்டத்தட்ட 50 சதவிகித வீழ்ச்சிக்கு காரணம் அந்த நிறுவனத்தின் மீதான வெறுப்பு என பாங்க் ஆஃப் அமெரிக்கா ஆய்வாளர்கள் திங்களன்று வெளிப்படுத்தியுள்ளார்.