9.1 C
Cañada
March 14, 2025
இலங்கை

அநுராதபுர பெண் வைத்தியரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது

அநுராதபுரம் போதனா மருத்துவமனை பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம், அநுராதபுரம் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கான விடுதியில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் கத்தி முனையில் தவறான நடத்தைக்கு  உள்ளாக்கப்பட்டிருந்தார்.

சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டிருந்ததோடு, அவரைத் தேடுவதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

யாழ்- இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

admin

7 ஆண்டுகளுக்குப் பின் அரச சேவையில் முகாமைத்துவ உத்தியோகத்தர்களை நியமிக்க அரசு எடுத்துள்ள முடிவு

admin

குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்களுக்குத் துரித தொலைபேசி இலக்கம்

admin

Leave a Comment