5.2 C
Cañada
March 14, 2025
இலங்கை

பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துவரும் போதைப்பொருள் பழக்கம்

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் அதிக அளவில் ஈடுபடுவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை கவலை வெளியிட்டுள்ளது.

புற்றுநோய் நோயாளர்களுக்கு வழங்கப்படும் வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல மருந்துகள் போதைக்கு அடிமையானவர்களால் அதிகளவில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அந்த சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் 15 முதல் 17 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கும் பரவிவிட்டதாக கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் 1,62,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாட்டில் 92,000 முதல் 1,00,000 பேர் வரை போதைப்பொருள் பழக்கத்திற்கும் அடிமைகளாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Related posts

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் யானைகளை பாதுகாக்கும் புதிய முயற்சி

admin

நாவுல பகுதியில் நடைபெற்ற விபத்தில் இருவர் பலி

admin

தங்க நகைகளுடன் இந்தியாவுக்கு தப்பியோடியுள்ள செவ்வந்தி

admin

Leave a Comment