7.4 C
Cañada
March 16, 2025
இலங்கை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்த பெண்

நாரஹேன்பிட்டியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்து, 1,340,000 ரூபாயை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 03 முறைப்பாடுகள் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வெள்ளவத்தையில் வசிக்கும் 45 வயதுடைய பெண் எனத் தெரியவந்ததுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்து பணத்தை மோசடி செய்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வெள்ளவத்தை, வாதுவ, மீகஹவத்த, ஹபராதுவ மற்றும் கிரியுல்ல ஆகிய பொலிஸ் நிலையங்களில் இது தொடர்பாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related posts

7 ஆண்டுகளுக்குப் பின் அரச சேவையில் முகாமைத்துவ உத்தியோகத்தர்களை நியமிக்க அரசு எடுத்துள்ள முடிவு

admin

பெண் மருத்துவரின் மோசமான புகைப்படங்களை பதிவு செய்த முன்னாள் இராணுவ வீரர்

admin

தமிழர் பகுதியில் சட்டவிரோதமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது

admin

Leave a Comment