ஏ.ஆர்.ரகுமான் இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது காலை 7.30 மணி அளவில் திடீரென ஏற்ப்பட்ட நெஞ்சு வலி காரணமாக அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இதயத்தில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று இதயவியல் துறை டாக்டர்கள் பரிசோதித்தார்கள். மேலும் இவர் லண்டனில் இருந்து நேற்று இரவுதான் மும்பை வழியாக சென்னை திரும்பினார்.
ஏ.ஆர்.ரகுமானுடன் அவரது மகன் அமீன், மகள் இஸ்ரத், சகோதரி ரஹானா ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள். ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விவாகரத்து குறித்து அறிவித்ததைத் தொடர்ந்து மும்பையில் தனியாக வசித்து வருகிறார்
ஏ.ஆர்.ரகுமானின் மற்றொரு சகோதரியான பாத்திமா “தொடர் பயணங்களால் பெரிய களைப்பில் இருந்தார். அதற்காக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைதான். தற்போது உடல்நிலை சீராக உள்ளது. பயப்படும்படி எதுவும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.