6.9 C
Cañada
March 17, 2025
இந்தியா

ஆவி புகுந்ததாக கூறி தீயின் முன் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட பச்சிளம் குழந்தை

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் ஆவி புகுந்ததாக கூறி 6 மாத குழந்தையை மந்திரவாதி ஒருவர் தலைகீழாக தீயிக்கு மேல் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு சில நாட்களுக்கு முன் திடீர் உடல் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. இதன் போது குழந்தையை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லாமல் பெற்றோர் அதே கிராமத்தை சேர்ந்த மந்திரவாதியிடம் காண்பிப்பதற்காக அழைத்து சென்றுள்ளனர்.

அவ் மந்திரவாதி குழந்தையின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக கூறவே பெற்றோர் ஆவியை வெளியேற்றுமாறு மந்திரவாதியிடம் வேண்டியுள்ளனர். இதையடுத்து, மந்திரவாதி குழந்தையின் உடலில் புகுந்துள்ள ஆவியை வெளியேற்ற நேற்று முன்தினம் செங்கல்களை அடுக்கிவைத்து அதில் விறகுகள் கொண்டு தீ மூட்டியுள்ளார். பின்னர்,  தீயின் முன் பச்சிளம் குழந்தையை  கட்டி தலைகீழாக தொங்கவிட்டுள்ளார்.

பச்சிளம் குழந்தை தீயின் வெப்பத்தால் அலறி துடித்த போது இதைக்கண்டு பதறிய பெற்றோர் குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். குழந்தையின் கண் பகுதியில் கடுமையாக பாதிப்பு இருந்ததை கண்ட வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் குழந்தையின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பார்வையை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மூன்று பிள்ளைகளை கொன்று தானும் தூக்கில் தொங்கிய தந்தை

admin

இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

admin

தமிழ்நாடு இந்தி மொழியை புறக்கணிப்பது ஏன்? தமிழ்நாட்டை தாக்கிய பவன் கல்யாண்

admin

Leave a Comment